தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பேயர்ன் முனிக் 'சாம்பியன்'

பேயர்ன் முனிக் 'சாம்பியன்'

பேயர்ன் முனிக் 'சாம்பியன்'


ADDED : ஏப் 20, 2026 10:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 10:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முனிக்: ஜெர்மனியில், பண்டெஸ்லிகா கால்பந்து 63வது சீசன் நடக்கிறது. முனிக் நகரில் நடந்த போட்டியில் பேயர்ன் முனிக், ஸ்டட்கர்ட் அணிகள் மோதின. இதில் ஹாரி கேன் தலைமையிலான பேயர்ன் முனிக் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 30 போட்டியில், 25 வெற்றி, 4 'டிரா', ஒரு தோல்வி என, 79 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்த பேயர்ன் முனிக் அணி 35வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பாரிஸ் அணி ஏமாற்றம்

பாரிஸ்: பிரான்சில், 'லீக்-1' கால்பந்து 88வது சீசன் நடக்கிறது. பாரிசில் நடந்த போட்டியில் லியான், பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய பி.எஸ்.ஜி., அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதுவரை விளையாடிய 28 போட்டியில், 20 வெற்றி, 3 'டிரா', 5 தோல்வி என, 63 புள்ளிகளுடன் பி.எஸ்.ஜி., அணி முதலிடத்தில் நீடிக்கிறது. லியான் அணி 54 புள்ளிகளுடன் (16 வெற்றி) 3வது இடத்துக்கு முன்னேறியது.

வேல்ஸ் வீரர் முன்னேற்றம்

ஷெப்பீல்டு: இங்கிலாந்தில், உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் வேல்சின் மார்க் வில்லியம்ஸ், போலந்தின் ஆன்டோனி கோவால்ஸ்கி மோதினர். இதில் வில்லியம்ஸ் 10-4 என வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் பேரி ஹாக்கின்ஸ், வேல்சின் மாத்யூ ஸ்டீவன்ஸ் மோதினர். இதில் ஹாக்கின்ஸ் 10-4 என வென்றார். வடக்கு அயர்லாந்தின் மார்க் ஆலன் 10-6 என சீனாவின் ஜாங் ஆன்டாவை வீழ்த்தினார்.

எக்ஸ்டிராஸ்

* சென்னையில் இன்று நடக்கவுள்ள ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியில் சென்னை, முகமதன் அணிகள் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 8 போட்டியில், 2 வெற்றி, 2 'டிரா', 4 தோல்வி என, 8 புள்ளிகளுடன் சென்னை அணி 10வது இடத்தில் உள்ளது.

* ரஞ்சி கோப்பை அசாம் அணியின் தலைமை பயிற்சியாளராக கிரண் பவார் 50, நியமனம். இவர், முதல் தர போட்டியில் மும்பை, கோவா, அசாம், பரோடா அணிகளுக்காக விளையாடினார். தவிர இவர், முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரமேஷ் பவாரின் மூத்த சகோதரர்.

* பெங்களூருவில், இந்திய ஹாக்கி வீரர்களுக்கான பயிற்சி முகாம் (ஏப். 20 - மே 9) நடக்கிறது. இதற்கான 36 பேர் கொண்ட உத்தேச பட்டியலில் ஹர்மன்பிரீத் சிங், செல்வம் கார்த்தி, அமித் ரோஹிதாஸ், ஹர்திக் சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

* டேராடூனில், ஜூனியர், யூத் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான (19 வயது) 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி (3-0), பஞ்சாப், சண்டிகர் அணிகளை வென்றது. 'ஏ' பிரிவில் முதலிடத்தை உறுதி செய்த தமிழகம், 'ரவுண்டு-16' சுற்றுக்கு தகுதி பெற்றது.

* அமெரிக்காவில் நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை அதிதி, 76 புள்ளிகளுடன் 51வது இடத்தை பகிர்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவின் ஹன்னா கிரீன், 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us