/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பெங்களூரு 'ஹாட்ரிக்' வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
/
பெங்களூரு 'ஹாட்ரிக்' வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
பெங்களூரு 'ஹாட்ரிக்' வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
பெங்களூரு 'ஹாட்ரிக்' வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
ADDED : ஆக 29, 2024 10:33 PM

சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் பெங்களூரு அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
சென்னையில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் பெங்களூருவின் அல்வாரோ 2-1 (11-6, 11-7, 10-11) என ஜெய்ப்பூரின் சோ செயுங்மினை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் லில்லி ஜாங் (பெங்களூரு) 3-0 (11-5, 11-10, 11-6) என நித்யஸ்ரீ மணியை (ஜெய்ப்பூர்) தோற்கடித்தார்.
கலப்பு இரட்டையரில் எழுச்சி கண்ட நித்யஸ்ரீ மணி, சோ செயுங்மின் ஜோடி 3-0 (11-7, 11-9, 11-9) என லில்லி ஜாங், அந்தோணி அமல்ராஜ் ஜோடியை வென்றது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் பெங்களூருவின் ஜீத் சந்திரா 3-0 (11-8, 11-9, 11-6) என ஸ்னேஹித்தை (ஜெய்ப்பூர்) தோற்கடித்தார்.
பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் பெங்களூருவின் மணிகா பத்ரா 3-0 (11-10, 11-4, 11-10) என ஜெய்ப்பூரின் சுதாசினியை வீழ்த்தினார். முடிவில் பெங்களூரு அணி 11-4 என்ற கணக்கில், வரிசையாக 3வது வெற்றியை பதிவு செய்தது. முதலிரண்டு போட்டியில் சென்னை, புனே அணிகளை வீழ்த்தியது.