ADDED : மார் 27, 2026 10:57 PM

* ஹாக்கி இந்தியா சார்பில், கடந்த ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதை முறையே ஹர்திக் சிங், நவ்னீத் கவுர் பெற்றனர். சிறந்த கோல்கீப்பருக்கான விருதை இந்திய வீராங்கனை பிச்சு தேவி கைப்பற்றினார்.
* இந்திய ஹாக்கி வீரர் குர்ஜந்த் சிங் 31, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடந்த 2017ல் அறிமுகமான இவர், ஒலிம்பிக்கில் வெண்கலம் (2020, 2024) வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இந்தியாவுக்காக 130 போட்டிகளில் (33 கோல்) பங்கேற்றுள்ளார்.
* சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில், 'கேலோ இந்தியா' பழங்குடியினர் விளையாட்டு நடக்கிறது. மூன்றாம் நாள் முடிவில் 13 தங்கம், 5 வெள்ளி, ஒரு வெண்கலம் கைப்பற்றிய கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா நீச்சல் வீரர் மணிகண்டா, மேலும் 2 தங்கம் (50 மீ., 'பேக்ஸ்டிரோக்', 100 மீ., 'பட்டர்பிளை') கைப்பற்றினார்.
* ஆமதாபாத்தில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின்
சசிகுமார் முகுந்த் 6-7, 6-4, 3-6 என, சகவீரர் அர்ஜுன் ரதியிடம்
தோல்வியடைந்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சித்தார்த் ரவாத்
7-6, 6-3 என, சகவீரர் திக்விஜய்பிரதாப் சிங்கை வீழ்த்தினார்.
