தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பங்கஜ் அத்வானி சாம்பியன் * உலக பில்லியர்ட்சில் அபாரம்

பங்கஜ் அத்வானி சாம்பியன் * உலக பில்லியர்ட்சில் அபாரம்

பங்கஜ் அத்வானி சாம்பியன் * உலக பில்லியர்ட்சில் அபாரம்


ADDED : நவ 09, 2024 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2024 11:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோஹா: உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் கோப்பை வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி.

கத்தாரில் ஆண்களுக்கான உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் பங்கஜ் அத்வானி, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் நேற்று சக இந்திய வீரர் சவுரவ் கோத்தாரியை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

தொடர்ந்து நடந்த பைனலில் இங்கிலாந்தின் ராபர்ட் ஹாலை சந்தித்தார்.

முதல் மூன்று 'பிரேமை' பங்கஜ் அத்வானி (150-94, 151-0, 150-84) வசப்படுத்தினார். அடுத்த இரு பிரேமை ராபர்ட் (151-74, 154-6) கைப்பற்றினார். 6 பிரேமில் அசத்திய பங்கஜ் அத்வானி, 152-46 என வசப்படுத்தினார்.

முடிவில் பங்கஜ் அத்வானி 4-2 என வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை கைப்பற்றினார்.

28 வது கோப்பை

இந்தியாவின் புனேயை சேர்ந்தவர் பங்கஜ் அத்வானி 39. இவர், பில்லியர்ட்சில் 18, உலக அணிக்கான பில்லியர்ட்சில் 1, பல்வேறு பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கர் தொடரில் 9 என மொத்தம் 28 கோப்பை வென்று அசத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us