sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 30, 2026 ,சித்திரை 17, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

பாப் ஹால் மரணம்

/

பாப் ஹால் மரணம்

பாப் ஹால் மரணம்

பாப் ஹால் மரணம்


ADDED : ஏப் 13, 2026 11:11 PM

Google News

ADDED : ஏப் 13, 2026 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாஸ்டன்: அமெரிக்க வீல்சேர் பந்தய வீரர் பாப் ஹால் 74. குழந்தை பருவத்தில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவரது இரண்டு கால்களும் செயலிழந்தன. 'வீல்சேர் பந்தயத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் இவர், பாஸ்டன் மாரத்தானில் 2 முறை (1975, 1976) சாம்பியன் பட்டம் வென்றார். ஓய்வுக்கு பின், போட்டியில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கு வசதியாக வீல்சேர் வடிவமைத்து கொடுத்தார். உடல் நலக்குறைவால் பாப் ஹால் காலமானார்.

மான்செஸ்டர் சிட்டி அசத்தல்

லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, செல்சி அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 31 போட்டியில், 19 வெற்றி, 7 'டிரா', 5 தோல்வி என, 64 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி அணி 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஆர்சனல் அணி (21 புள்ளி) நீடிக்கிறது.

எக்ஸ்டிராஸ்

* சைப்ரஸ் தீவில், 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் பிரிவில் இன்று நடக்கும் 13வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் ஜோங்யி டான் மோதுகின்றனர். 12 சுற்றுகளின் முடிவில் தலா 7 புள்ளிகளுடன் முதலிடத்தை சீனாவின் ஜினர் ஜூவுடன் பகிர்ந்து கொண்டுள்ள வைஷாலி, இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

* மங்கோலியாவில் நடந்த ஆசிய குத்துச்சண்டையில், இந்திய ராணுவத்தை சேர்ந்த விஷ்வநாத் சுரேஷ் (தங்கம்), பிரீத்தி பவார் (தங்கம்), அருந்ததி சவுத்ரி (தங்கம்), ஜெய்ஸ்மின் லம்போரியா (வெள்ளி), சச்சின் சிவாச் (வெள்ளி), ஆகாஷ் (வெண்கலம்), லோகேஷ் (வெண்கலம்), நரேந்தர் பெர்வால் (வெண்கலம்) என, 8 பேர் பதக்கம் கைப்பற்றினர்.

* புளோரிடாவில் நடக்கும் யு.எஸ். ஓபன் 'பிக்கிள்பால்' சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் சிங், தீரன் படேல் தங்கம் வென்றனர். இந்தியாவுக்கு இதுவரை 3 தங்கம் கிடைத்துள்ளது.






      Dinamalar
      Follow us