/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: அரையிறுதியில் அபிஷேக்
/
குத்துச்சண்டை: அரையிறுதியில் அபிஷேக்
ADDED : மே 15, 2024 10:43 PM

அஸ்தானா: எலோர்டா கோப்பை குத்துச்சண்டை அரையிறுதிக்கு இந்தியாவின் அபிஷேக் யாதவ், மணிஷா, மோனிகா முன்னேறினர்.
கஜகஸ்தானில், எலோர்டா கோப்பை குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 67 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அபிஷேக் யாதவ், கஜகஸ்தானின் ரகாத் சீட்ஜான் மோதினர். அபாரமாக ஆடிய அபிஷேக் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பவான் பர்த்வால் (54 கிலோ), கவிந்தர் சிங் பிஷ்ட் (57 கிலோ) தோல்வியை தழுவினர். மற்ற இந்திய வீரர்களான வரிந்தர் சிங் (60 கிலோ), ஹிதேஷ் (71 கிலோ) முதல் சுற்றோடு திரும்பினர்.
பெண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் மணிஷா (60 கிலோ), மோனிகா (+81 கிலோ) வெற்றி பெற்றனர். பெண்கள் பிரிவில் 8 பேர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர். ஏற்கனவே மினாக் ஷி (48 கிலோ), நிகாத் ஜரீன் (52), சோனு (63), மஞ்சு பாம்போரியா (66), ஷலாகா சிங் சான்சன்வால் (70) அரையிறுதிக்கு முன்னேறினர்.

