/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: காலிறுதியில் அங்குஷிதா
/
குத்துச்சண்டை: காலிறுதியில் அங்குஷிதா
ADDED : மே 29, 2024 10:31 PM

பாங்காக்: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றின் காலிறுதிக்கு இந்தியாவின் அங்குஷிதா (60 கிலோ), நிஷாந்த் தேவ் (71) முன்னேறினர்.
தாய்லாந்தில், பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கான உலக தகுதிச் சுற்று நடக்கிறது. பெண்களுக்கான 60 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் அங்குஷிதா போரோ, கஜகஸ்தானின் ரிம்மா வோலோசென்கோ மோதினர். அபாரமாக ஆடிய அங்குஷிதா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான 66 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அருந்ததி சவுத்தரி, போர்டோ ரிகோவின் ஸ்டெபானி பைனிரோ மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு தேசிய சாம்பியன்' அருந்ததி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான 71 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ் 5-0 என தாய்லாந்தின் பீரபத் யேசுங்நோனை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்களுக்கான +92 கிலோ பிரிவு போட்டியில் இந்தியாவின் நரேந்தர் பெர்வால், ஈகுவடாரின் ஜெர்லோன் கில்மார் காங்கோ சாலா மோதினர். ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற நரேந்தர் 2-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.