/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: அரையிறுதியில் குஷி சந்த்
/
குத்துச்சண்டை: அரையிறுதியில் குஷி சந்த்
ADDED : ஏப் 26, 2025 12:03 AM

அம்மான்: ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை அரையிறுதிக்கு இந்தியாவின் குஷி சந்த், உதம் சிங் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் முன்னேறினர்.
ஜோர்டானில், 15, 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. நேற்று, 17 வயதுக்குட்பட்டோருக்கான காலிறுதி போட்டிகள் நடந்தன.
பெண்களுக்கான 46 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் குஷி சந்த், வியட்நாமின் குயென் தி ஹாங் யென் மோதினர். இந்திய வீராங்கனையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வியட்நாம் வீராங்கனை திணறியதால், போட்டியை பாதியில் நிறுத்திய 'ரெப்ரி', குஷி சந்த் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
பெண்களுக்கான 48 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜியா 5-0 என வியட்நாமின் தி ரு நா தின்ஹ்கை வென்றார். இந்தியாவின் ஜன்னத் (54 கிலோ) 4-1 என உக்ரைனின் அன்ஹெலினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சமிக் ஷா பிரதீப் சிங் (52 கிலோ), ராதாமணி லாங்ஜம் (57 கிலோ) தோல்வியடைந்தனர்.
ஆண்களுக்கான 54 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் உதம் சிங் ராகவ் 5-0 என, ஜப்பானின் கிடாமுராவை வென்றார். மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அம்பேகர் (48 கிலோ), அமன் தேவ் (50 கிலோ), திகம் சிங் (52 கிலோ), ராகுல் காரியா (57 கிலோ) வெற்றி பெற்றனர். துருவ் கார்ப் (46 கிலோ) தோல்வியடைந்தார்.

