/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: லவ்லினா 'வெள்ளி'
/
குத்துச்சண்டை: லவ்லினா 'வெள்ளி'
ADDED : ஜூன் 16, 2024 11:34 PM

புதுடில்லி: கிராண்ட் பிரிக்ஸ் குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா (75 கிலோ) வெள்ளி வென்றார்.
செக்குடியரசில், கிராண்ட் பிரிக்ஸ் குத்துச்சண்டை தொடர் நடந்தது. பெண்களுக்கான 75 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் லவ்லினா, சீனாவின் லி கியான் மோதினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா, கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டு பைனலில் லி கியானிடம் தோல்வியடைந்தார். இதற்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லவ்லினா 2-3 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அசாமை சேர்ந்த லவ்லினா 26, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு இந்தியா சார்பில் 6 பேர் தகுதி பெற்றுள்ளனர்.