/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: நிஷாந்த் தேவ் ஏமாற்றம்
/
குத்துச்சண்டை: நிஷாந்த் தேவ் ஏமாற்றம்
UPDATED : ஆக 04, 2024 12:42 AM
ADDED : ஆக 03, 2024 11:51 PM

பாரிஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான குத்துச்சண்டை 71 கிலோ பிரிவு
காலிறுதியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், மெக்சிகோவின் மார்கோ வெர்டே
மோதினர். இதில் ஏமாற்றிய நிஷாந்த் தேவ் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து
வெளியேறினார்.
சரவணன் 23வது இடம்
பாரிஸ் ஒலிம்பிக் படகு போட்டிக்கான 'லேசர்' பிரிவு 10
சுற்றுகளாக நடக்கிறது. ஆண்கள் பிரிவில், 6 சுற்றுகளின் முடிவில்
இந்தியாவின் விஷ்ணு சரவணன் (தமிழகம்) 83 புள்ளிகளுடன் 23வது இடத்தில்
உள்ளார். பெண்களுக்கான பிரிவில் 6 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் நேத்ரா
குமணன், 96 புள்ளிகளுடன் 24வது இடத்தில் உள்ளார்.
குண்டு எறிதல்: தஜிந்தர்பால் 29வது இடம்ஆண்களுக்கான குண்டு எறிதல் தகுதிச் சுற்று 'ஏ' பிரிவில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் டூர் 29, பங்கேற்றார். பைனலுக்கு முன்னேற 21.35 மீ., இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முதல் வாய்ப்பில் 18.05 மீ., எறிந்த தஜிந்தர்பால், அடுத்த இரு வாய்ப்புகளில் தவறு செய்தார். 'ஏ' பிரிவில் 15வது இடம் பிடித்த இவர், ஒட்டுமொத்தமாக 29வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார். கடந்த ஆண்டு 21.77 மீ., எறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார். இந்த இலக்கை எட்டியிருந்தால் பைனலுக்கு தகுதி பெற்றிருக்கலாம்.