தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குத்துச்சண்டை: காலிறுதியில் சச்சின்

குத்துச்சண்டை: காலிறுதியில் சச்சின்

குத்துச்சண்டை: காலிறுதியில் சச்சின்


ADDED : மே 30, 2024 10:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2024 10:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாங்காக்: ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றின் காலிறுதிக்கு இந்தியாவின் சச்சின் (57 கிலோ) முன்னேறினார்.

தாய்லாந்தில், பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கான உலக தகுதிச் சுற்று நடக்கிறது. ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சச்சின் சிவாச், துருக்கியின் படுஹான் சிப்ட்சி மோதினர். இதில் சச்சின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான 92 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சஞ்ஜீத் குமார், வெனிசுலாவின் லுாயிஸ் சான்செஸ் மோதினர். இதில் சஞ்ஜீத் 5-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.

பெண்களுக்கான 57 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா, அஜய்பெய்ஜானின் மஹ்சதி ஹம்சயேவா மோதினர். இதில் ஜெய்ஸ்மின் 5-0 என வெற்றி பெற்று, 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us