ADDED : மே 12, 2026 10:58 PM

தாஷ்கென்ட்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் லக்சய் போகத், பைனலுக்கு முன்னேறினார்.
உஸ்பெகிஸ்தானின் தாகஷ்கென்ட் நகரில் 15, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. 17 வயது ஆண்கள், 75 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் லக்சய் போகத், தென் கொரியாவின் சியுங்மின் லீயை எதிர்கொண்டார்.
இதில் லக்சய் 5:0 என ஒரு மனதாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, பைனலுக்கு முன்னேறினார்.
46 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நரேந்திர நெல்லா, உஸ்பெகிஸ்தானின் அப்துல்லோவை சந்தித்தார். இதில் ஏமாற்றிய நரேந்திரா, 0:5 என்ற கணக்கில் தோற்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
50 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் யாஷ் யாதவ், 1:4 என்ற கணக்கில் மங்கோலியாவின் சல்டு உசுக்பட்டரிடம் தோல்வியடைந்தார். இவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
70 கிலோ பிரிவில் இந்தியாவின் நமன், 2:3 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்துவோஹித்திடம் போராடி தோற்க, வெண்கலம் பெற்றார்.
