ADDED : மே 14, 2026 10:50 PM

தாஷ்கென்ட்: ஆசிய குத்துச்சண்டையில் இந்திய இளம் பெண்கள், பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தனர்.
உஸ்பெகிஸ்தானின் தாகஷ்கென்ட் நகரில் 15, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. 15 வயது பெண்கள் பிரிவில், பல்வேறு பைனல் நடந்தன. இந்தியாவின் அன்ஜீ (37 கிலோ), சோனியா (40), தான்வி (43), ஹன்ஷிகா (46), சுனைனா (58), பூமிகா (61), ஏஞ்சல் (70) என 7 வீராங்கனைகள் தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.
அக் ஷிதா (33), தான்வி (64) என இருவரும் பைனலில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஜியா (35), குஷி (49), கனிஷ்கா (52), ஆஷ்வி (67), மான்வி (70+) வெண்கலம் வென்றனர்.
15 வயது பெண்கள் பிரிவில் மொத்தம் 7 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என 14 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் முதலிடம் பிடித்தது.
15 வயது ஆண்கள் பிரிவில் இந்தியாவின் யாஷ் குமார் (33), முகமது யாசெர் (58) தங்கம் வென்றனர். ஒட்டுமொத்தமாக இப்பிரிவில் 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் வென்ற இந்தியா, பட்டியலில் 3வது இடம் பெற்றது.
