/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்திய வீராங்கனைகள் அபாரம் * உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில்...
/
இந்திய வீராங்கனைகள் அபாரம் * உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில்...
இந்திய வீராங்கனைகள் அபாரம் * உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில்...
இந்திய வீராங்கனைகள் அபாரம் * உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில்...
ADDED : செப் 05, 2025 10:52 PM

லிவர்பூல்: இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 10 வீரர், 10 வீராங்கனைகள் என மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர்.
பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாக்சி சவுத்ரி, முதன் முறையாக சீனியர் அரங்கில் களமிறங்கிய உக்ரைனின் விக்டோரியாவை எதிர்கொண்டார். முதல் சுற்றில் சாக் சி முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றில் சாக் சியின் குத்துக்களை சமாளிக்க முடியாமல் திணறினார் விக்டோரியா. இதையடுத்து போட்டியை நிறுத்திய நடுவர்கள், சாக் சி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
பெண்களுக்கான 70 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சனமாச்சா சானு, டென்மார்க்கில் திட்டீயை சந்தித்தார். மூன்று சுற்றில் அசத்திய சானு, ஒருமனதாக வெற்றி பெற்றார்.
சாக்சி, சானு என இருவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர். 65 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் நீரஜ் போகத், 3-2 என பின்லாந்தின் கிறிஸ்டா கொவலெய்னனை வீழ்த்தினார். 75 கிலோ பிரிவில் இந்தியாவின் சுமித் குண்டு, 5-0 என ஜோர்டானின் முகமது அல் ஹொசைனை வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்திய வீரர் ஹர்ஷ் சவுத்ரி (90 கிலோ), போலந்தின் ஆடமிடம் தோல்வியடைந்தார்.