தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/நுபுர், ஜாஸ்மின் கலக்கல் * உலக குத்துச்சண்டை பைனலுக்கு தகுதி

நுபுர், ஜாஸ்மின் கலக்கல் * உலக குத்துச்சண்டை பைனலுக்கு தகுதி

நுபுர், ஜாஸ்மின் கலக்கல் * உலக குத்துச்சண்டை பைனலுக்கு தகுதி


ADDED : செப் 13, 2025 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2025 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லிவர்பூல்: உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியாவின் நுபுர் ஷியோரன், ஜாஸ்மின், மீனாட்சி முன்னேறினர்.

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

பெண்களுக்கான 80+ கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நுபுர் ஷியோரன், துருக்கியின் சேமா டஜ்டசை எதிர்கொண்டார். இந்தியாவின் முன்னாள் 'ஹெவிவெயிட்' குத்துச்சண்டை வீரரான ஹவா சிங் பேத்தியான நுபுர் ஷயோரன், துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 5-0 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.

ஜாஸ்மின் வெற்றி

57 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின், வெனிசுலாவின் ஓமைலின் அல்காலாவை சந்தித்தார். துவக்கத்தில் தடுமாறிய ஜாஸ்மின், பின் ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 5-0 என வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார். இதில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்தின் ஜூலியாவை சந்திக்க உள்ளார்.

48 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மீனாட்சி, 2023 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற மங்கோலியாவின் அல்டன்ட்செட்செக்கை சந்தித்தார். இதில் மீனாட்சி 5-0 என வென்று, பைனலுக்கு முன்னேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us