தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு

பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு

பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு


ADDED : ஜூலை 30, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 10:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் 34, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடைசியாக (ஜூலை 5) நார்வே அணிக்கு எதிரான உலக கோப்பை 'ரவுண்டு-16' போட்டியில் விளையாடினார். பிரேசில் அணிக்காக 130 போட்டியில், 80 கோல் அடித்துள்ளார்.

* இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக, முன்னாள் நியூசிலாந்து பேட்டர் ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு ஜோ ரூட் மீண்டும் கேப்டன் ஆனார்.

* கனடாவில் நடக்கும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் காலிறுதியில், இந்திய ஆண்கள் அணி 2-1 என, இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்திய பெண்கள் அணி 1-2 என, அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது.

* தென் ஆப்ரிக்காவில் நடக்கும் 'எஸ்.ஏ.20' தொடருக்கான ('டி-20') ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆல்பி மார்க்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.

* மணிப்பூரின் இம்பாலில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில், அறிமுக ரேங்டாய் எப்.சி., அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படை அணியை வீழ்த்தியது.

* இந்தியா, பிரேசில் அணிகள் மோதும் சர்வதேச நட்பு கால்பந்து போட்டி வரும் அக். 3ல் கொல்கட்டாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதனை அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு உறுதி செய்தது.

* டில்லியில் நடக்கும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பைனலில், இந்திய ஆண்கள் அணி 3-2 என, மலேசியாவை வீழ்த்தியது. இந்திய பெண்கள் அணி 3-0 என, மலேசியாவை வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us