ADDED : மே 31, 2026 11:08 PM

பர்மிங்காம்: பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் 2வது சுற்றுக்கு இந்தியாவின் அபே சிங், வீர் சோட்ரானி முன்னேறினர்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில், பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங், கொலம்பியாவின் மதியாஸ் நட்சன் மோதினர். இதில் அபே சிங் 3-0 (11-8, 11-5, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, பாகிஸ்தானின் நுார் ஜமான். இதில் வீர் சோட்ரானி 3-1 (11-8, 12-14, 11-6, 11-7) என வென்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரமித் டான்டன், பிரான்சின் அகஸ்டி டுசூர் மோதினர். இதில் டான்டன் 14-12, 4-7 என இருந்த போது காயத்தால் பாதியில் விலகினார்.
பெண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் நார்டின் காரஸ் மோதினர். இதில் ஏமாற்றிய அனாஹத் 1-3 (8-11, 11-8, 8-11, 9-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
