/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பிரிட்டிஷ் ஸ்குவாஷ்: அனாஹத் அபாரம்
/
பிரிட்டிஷ் ஸ்குவாஷ்: அனாஹத் அபாரம்
ADDED : ஜூன் 01, 2025 11:37 PM

பர்மிங்காம்: பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் 2வது சுற்றுக்கு இந்திய வீராங்கனை அனாஹத் சிங் முன்னேறினார்.
பர்மிங்காமில், பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங் 17, பங்கேற்கிறார். பிரிட்டிஷ் ஓபன் பிரதான சுற்றில் விளையாடிய இளம் இந்திய வீராங்கனையானார் அனாஹத்.
முதல் சுற்றில் அனாஹத் சிங், ஸ்காட்லாந்தின் லிசா ஐட்கென் மோதினர். அபாரமாக ஆடிய அனாஹத் 3-1 (11-3, 6-11, 11-8, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். இதில் மலேசியாவின் சிவசங்கரியை எதிர்கொள்கிறார்.
ஆண்கள் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், இங்கிலாந்தின் ஜோனா பிரையன்ட் மோதினர். இதில் ஏமாற்றிய வேலவன் 0-3 (8-11, 5-11, 5-11) என தோல்வியடைந்தார்.