தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/'கேண்டிடேட்ஸ்' செஸ்: குகேஷ் முதலிடம்

'கேண்டிடேட்ஸ்' செஸ்: குகேஷ் முதலிடம்

'கேண்டிடேட்ஸ்' செஸ்: குகேஷ் முதலிடம்


ADDED : ஏப் 21, 2024 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2024 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டொரன்டோ: 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரின் 13வது சுற்றில் பிரான்சின் பிரூசா அலிரேசாவை வீழ்த்திய இந்தியாவின் குகேஷ் முதலிடத்தில் நீடிக்கிறார்.

கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, குகேஷ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளிட்ட 8 பேர் பங்கேற்கின்றனர். இதன் 13வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், பிரான்சின் பிரூசா அலிரேசா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய தமிழகத்தின் குகேஷ், 63வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானா காருணாவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய தமிழகத்தின் பிரக்ஞானந்தா 89வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அஜர்பெய்ஜானின் நிஜாத் அபசோவ் மோதிய மற்றொரு 13வது சுற்றுப் போட்டி 31வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

குகேஷ் 'நம்பர்-1'

13 சுற்றுகளின் முடிவில் குகேஷ் (8.5 புள்ளி) 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அடுத்த மூன்று இடங்களில் தலா 8.0 புள்ளிகளுடன் ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி, அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, பேபியானா காருணா உள்ளனர். பிரக்ஞானந்தா (6.0 புள்ளி), விதித் சந்தோஷ் (5.5) முறையே 5, 6வது இடத்தில் உள்ளனர்.

கடைசி சுற்றில் குகேஷ், நகமுரா மோதுகின்றனர். இதில் சென்னை வீரர் குகேஷ் 17, வெற்றி பெறும் பட்சத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறலாம்.

வைஷாலி வெற்றி

பெண்களுக்கான 13வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் டிங்ஜீ லீயை வீழ்த்தினார். இந்தியாவின் கொனேரு ஹம்பி, உக்ரைனின் அனா முசிசுக் மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. 13 சுற்றுகளின் முடிவில் ஹம்பி, வைஷாலி உள்ளிட்ட 4 பேர் தலா 6.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us