/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கேண்டிடேட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'
/
கேண்டிடேட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா 'டிரா'
ADDED : ஏப் 05, 2024 10:27 PM

டொரன்டோ: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் முதல் சுற்று போட்டியை பிரக்ஞானந்தா உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் 'டிரா' செய்தனர்.
கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜ்ராத்தி உட்பட 8 பேர் பங்கேற்றுள்ளனர்.
முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரேசா மோதினர். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, சற்று பின்தங்கினார். 31வது நகர்த்தலில் அலிரேசா செய்த தவறை பயன்படுத்திக் கொண்ட பிரக்ஞானந்தா, அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு மீண்டு வந்தார். 39வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.
மற்றொரு முதல் சுற்றில் இந்திய வீரர்கள் குகேஷ்-விதித் மோதினர். இப்போட்டி 21 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முதல் சுற்று முடிவில் 8 வீரர்களும் தலா 0.5 புள்ளி பெற்றனர்.
பெண்களுக்கான 'கேண்டிடேட்ஸ்' தொடர் முதல் சுற்றில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி மோதினர். இப்போட்டி 41வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

