தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கேண்டிடேட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா, குகேஷ் 'டிரா'

கேண்டிடேட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா, குகேஷ் 'டிரா'

கேண்டிடேட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா, குகேஷ் 'டிரா'


ADDED : ஏப் 08, 2024 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2024 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டொரன்டோ: 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரின் நான்காவது சுற்றில் பிரக்ஞானந்தா, குகேஷ் 'டிரா' செய்தனர்.

கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளிட்ட 8 பேர் பங்கேற்கின்றனர்.

இதன் நான்காவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. இப்போட்டியின் 24வது நகர்த்தலில் இப்போட்டி 'டிரா' ஆனது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் பேபியானோ காருணாவை எதிர்கொண்டார். இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் நடந்த இப்போட்டி, 74 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் விதித் குஜ்ராத்தி, ரஷ்யாவின் இயான் நேபோம்னியாட்சியிடம் தோல்வியடைந்தார்.

நான்கு சுற்று முடிவில் நேபோம்னியாட்சி 3.0 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். தலா 2.5 புள்ளிகளுடன் குகேஷ், காருணா அடுத்த இரு இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (2.0) நான்காவது, விதித் சந்தோஷ் (1.5) கடைசி இடத்தில் (8வது) உள்ளனர்.

ஹம்பி தோல்வி

பெண்களுக்கான 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரின் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, பல்கேரியாவின் நர்குலிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை வைஷாலி, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா மோதிய போட்டி 'டிரா' ஆனது. வைஷாலி (2.0), ஹம்பி (1.5) 4, 6வது இடத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us