தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சென்னை அணி 'திரில்' வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

சென்னை அணி 'திரில்' வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

சென்னை அணி 'திரில்' வெற்றி: அல்டிமேட் டேபிள் டென்னிசில்


ADDED : ஆக 25, 2024 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2024 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் சென்னை அணி 8-7 என, டில்லியை வீழ்த்தியது.

சென்னையில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் சென்னையின் அஜந்தா சரத் கமல், டில்லியின் லெவென்கோ மோதினர். இதில் சரத் கமல் 2-1 (11-5, 8-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் சென்னையின் சகுரா மோரி 2-1 (11-10, 11-8, 4-11) என டில்லியின் ஓரவானை வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் போட்டியில் சரத் கமல்-சகுரா மோரி ஜோடி 2-1 (11-6, 11-6, 9-11) என டில்லியின் சத்யன், ஓரவான் ஜோடியை வீழ்த்தியது.

ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் சத்யன் ஞானசேகரன் 1-2 (7-11, 9-11, 11-8) என சென்னையின் ஜூல்ஸ் ரோலந்திடம் தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் டில்லியில் தியா 3-0 (11-9, 11-7, 11-5) என சென்னையின் பைஸ்யாவை வென்றார்.

முடிவில் சென்னை அணி 8-7 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. இது, இம்முறை சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றியானது. முதல் போட்டியில் சென்னை அணி, பெங்களூருவிடம் தோல்வியடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us