தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சென்னை இரண்டாவது வெற்றி * அல்டிமேட் டேபிள் டென்னிசில்

சென்னை இரண்டாவது வெற்றி * அல்டிமேட் டேபிள் டென்னிசில்

சென்னை இரண்டாவது வெற்றி * அல்டிமேட் டேபிள் டென்னிசில்


ADDED : செப் 03, 2024 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2024 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை, புனே அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் சென்னை வீரர் சரத்கமல்-அங்கூர் பட்டாசார்ஜீ மோதினர். இதில் 3-0 என (11-7, 11-6, 11-2) சரத்கமல் வெற்றி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் சென்னையின் பொய்மன்தீ 3-0 (11-10, 119, 11-10) என புனேயின் ஆயிஹிகா முகர்ஜியை வென்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் சென்னை அணியின் சரத், சகுரா ஜோடி, 3-0 என புனேயின் அனிர்பன் கோஷ், நடாலியா பஜோர் ஜோடியை சாயத்தது. அடுத்து நடந்த ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது போட்டியில் சென்னையின் ஜூல்ஸ் ரோலண்டு, 2-1 என மான்டெய்ரோவை வென்றார்.

முடிவில் சென்னை அணி 12-3 என்ற கணக்கில் இத்தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us