/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: அர்ஜுன் மீண்டும் 'டிரா'
/
செஸ்: அர்ஜுன் மீண்டும் 'டிரா'
ADDED : மே 03, 2026 08:29 PM

மால்மோ: கிளாசிக் செஸ் தொடரின் 2வது சுற்று போட்டியை இந்தியாவின் அர்ஜுன் 'டிரா' செய்தார்.
சுவீடனின் மால்மோ நகரில், 'டெபே சீஜ்மான்' கிளாசிக் செஸ் தொடர் நடக்கிறது. இதில், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 8 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் 2வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, துருக்கியின் யாகிஸ் கான் எர்டோக்முஸ் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 78வது நகர்த்தலில் போட்டியை 'டிரா' செய்தார். மற்றொரு போட்டியில் கார்ல்சன் (கருப்பு), சுவீடனின் நில்ஸ் கிராண்டேலியசை (வெள்ளை) தோற்கடித்தார்.
கார்ல்சனுக்கு எதிரான முதல் சுற்று போட்டியை 'டிரா' செய்த அர்ஜுன், 1.0 புள்ளியுடன் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் அப்துசட்டோரோவ், அமெரிக்காவின் ஆண்டி ஆஸ்டின் உட்வார்டு, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் தலா 1.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

