ADDED : மார் 21, 2024 10:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிராகு: பிராகு செஸ் தொடரில் 11 வயது வீரர் ஆன்ஷ் நந்தன் சாம்பியன் ஆனார்.
செக் குடியரசில் சர்வதேச பிராகு செஸ் தொடர் நடந்தது. இதில் எதிர்கால வீரர்கள் பிரிவில் இந்தியா சார்பில் ஆன்ஷ் நந்தன் நேருர்கர் உட்பட 10 பேர் பங்கேற்றனர். மொத்தம் நடந்த 9 சுற்றில் 7ல் வெற்றி பெற்றார். 2ல் 'டிரா' செய்ய 8.0 புள்ளியுடன் முதலிடம் பெற்று கோப்பை தட்டிச் சென்றார். போலந்தின் பாவெல் 6.5 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்தார். சுலோவாகியாவின் ஆன்ட்ரூ தாமஸ் (5.0) மூன்றாவது இடம் பெற்றார்.
இதையடுத்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட உள்ள கேண்டிடேட் மாஸ்டர் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார் நந்தன்.
இதுவரை பங்கேற்ற 278 போட்டிகளில் இவர், 163ல் வெற்றி பெற்றார். 47ல் 'டிரா' செய்த இவர், 68 போட்டியில் தோல்வியடைந்தார்.

