தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ் ஒலிம்பியாட்: இந்தியா 'ஹாட்ரிக்'

செஸ் ஒலிம்பியாட்: இந்தியா 'ஹாட்ரிக்'

செஸ் ஒலிம்பியாட்: இந்தியா 'ஹாட்ரிக்'


ADDED : செப் 18, 2026 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 10:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமர்கண்ட்: செஸ் ஒலிம்பியாட் 3வது சுற்றில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் வெற்றி பெற்றன.

உஸ்பெகிஸ்தானில், செஸ் ஒலிம்பியாட் 46வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு 3வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, இத்தாலி அணிகள் மோதின. இந்தியாவின் குகேஷ் (கருப்பு), 33வது நகர்த்தலில் இத்தாலியின் சபினோ புருனெல்லோவை (வெள்ளை) வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் நிஹால் சரின் (வெள்ளை) 40வது நகர்த்தலில் இத்தாலி வீரர் பிரான்செஸ்கோ சோனிசை (கருப்பு) தோற்கடித்தார். இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில், தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்தது.

பெண்கள் பிரிவு 3வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, கிரீஸ் அணிகள் மோதின. இதில் இந்தியாவின் கொனேரு ஹம்பி (வெள்ளை) 46வது நகர்த்தலில் கிரீசின் ஸ்டாவ்ரூலாவை (கருப்பு) வீழ்த்தினார். மற்ற இந்திய வீராங்கனைகளான வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ வெற்றி பெற்றனர். இந்தியாவின் திவ்யா தேஷ்முக், தனது போட்டியை 'டிரா' செய்தார். முடிவில் இந்திய அணி 3.5 - 0.5 என்ற கணக்கில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us