தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி

செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி

செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி


ADDED : ஆக 24, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 11:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செயின்ட் லுாயிஸ்: 'கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ்' அரையிறுதிக்கான 'கிளாசிகல்' 2வது சுற்றில், இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சன்ட் கீமரை வீழ்த்தினார்.

அமெரிக்காவின் செயின்ட் லுாயிஸ் நகரில், 'கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ்' நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் விளையாடுகின்றனர். இவர்கள் மோதிய 'கிளாசிகல்' முதல் சுற்று 'டிரா' ஆனது. இரண்டாவது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் சாமர்த்தியமாக விளையாடிய பிரக்ஞானந்தா, 55வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 'கிளாசிகல்' சுற்றின் முடிவில் பிரக்ஞானந்தா 9-3 என முன்னிலையில் உள்ளார்.

அடுத்து, இரண்டு 'ரேபிட்', நான்கு 'பிளிட்ஸ்' பிரிவு போட்டிகள் நடக்கவுள்ளன. பிரக்ஞானந்தா, இன்னும் 6 புள்ளி எடுக்கும் பட்சத்தில் பைனலுக்கு முன்னேறலாம்.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் சோ வெஸ்லே, பேபியானோ காருணா விளையாடுகின்றன. இவர்கள் மோதிய 'கிளாசிகல்' 2வது சுற்று போட்டியும் 'டிரா' ஆனது. இருவரும் தலா 6 புள்ளிகளுடன் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us