தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ சென்னையில் கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் * சாதிப்பாரா அர்ஜுன் எரிகைசி

சென்னையில் கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் * சாதிப்பாரா அர்ஜுன் எரிகைசி

சென்னையில் கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் * சாதிப்பாரா அர்ஜுன் எரிகைசி


ADDED : ஆக 05, 2025 10:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2025 10:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடரின் மூன்றாவது சீசன், இன்று சென்னையில் துவங்குகிறது.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும், 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் நடத்தப்படுகிறது. இதன் மூன்றாவது சீசன், இன்று துவங்குகிறது. வரும் 15ம் தேதி வரை நடக்கும் இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்க உள்ளனர்.

இதன் முதல் இரு தொடரில் சாம்பியன் ஆன இந்தியாவின் குகேஷ் (2023), அரவிந்த் சிதம்பரம் (2024) இம்முறை களமிறங்கவில்லை.

ரூ. 25 லட்சம்

மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜோர்டான் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். கடந்த 2024ல் சாலஞ்சர் பிரிவில் சாம்பியன் ஆன இந்தியாவின் பிரனவ், இம்முறை மாஸ்டர்ஸ் பிரிவில் களமிறங்குகிறார். சர்வதேச தரவரிசையில் 2776 புள்ளியுடன், 6வது இடத்திலுள்ள அர்ஜுன், கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

இதில் கோப்பை வெல்லும் வீரருக்கு ரூ. 25 லட்சம், 2, 3வது இடம் பெற்றால் ரூ. 15 லட்சம், ரூ. 10 லட்சம் பரிசு கிடைக்கும். தவிர, சாம்பியன் வீரர், 'பிடே' தரவரிசையில் 24.5 புள்ளி பெறலாம். இதனால், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் திறமை வெளிப்படுத்தும் வகையில், 'சாலஞ்சர்' பிரிவில் போட்டி நடக்க உள்ளன. இதில் கார்த்திகேயன் முரளி, லியோன் மென்டோன்கா, அபிமன்யு, ஆர்யன், அதிபன் பாஸ்கரன், இனியன், பிரனேஷ் என முன்னணி வீரர்களுடன், இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா களமிறங்குகின்றனர். சாலஞ்சர்ஸ் பிரிவில் சாதித்தால் ரூ. 7 லட்சம், 2026-ல் மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us