sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் * இன்று துவங்குகிறது

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் * இன்று துவங்குகிறது

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் * இன்று துவங்குகிறது


ADDED : ஆக 06, 2025 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 10:44 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடரின் மூன்றாவது சீசன்,ஒரு நாள் தாமதமாகஇன்று சென்னையில் துவங்குகிறது.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும், 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் நடத்தப்படுகிறது. வரும் 15ம் தேதி வரை நடக்கும் இத்தொடரில்மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்க உள்ளனர்.

மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜோர்டான் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர்,கடந்த 2024ல் சாலஞ்சர் பிரிவில் சாம்பியன் ஆன இந்தியாவின் பிரனவ்உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.

இதில் வெல்லும் வீரர்,'பிடே' தரவரிசையில் 24.5 புள்ளி பெறலாம். இதனால், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம். இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் திறமை வெளிப்படுத்தும் வகையில், 'சாலஞ்சர்' பிரிவில் போட்டி நடக்க உள்ளன. கார்த்திகேயன் முரளி, லியோன் மென்டோன்கா, அபிமன்யு, ஆர்யன், அதிபன் பாஸ்கரன், இனியன், பிரனேஷ் என முன்னணி வீரர்களுடன், இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹரிகா களமிறங்குகின்றனர்.

இதன் மூன்றாவது சீசன்,நேற்றுதுவங்கஇருந்தது. நள்ளிரவில் போட்டி நடக்க இருந்த ஓட்டலின் 9வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஒருநாள் தாமதமாக போட்டிகள் இன்று துவங்குகின்றன. வழக்கமான அட்டவணைப் படி நடக்கும். ஓய்வு நாள் ரத்து செய்யப்பட்டது.

தொடரின் இயக்குனர் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஸ்ரீநாத் நாராயணன் கூறுகையில்,'' இரவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அனைத்து வீரர், வீராங்கனைகள் அருகில் உள்ள வேறு ஓட்டலுக்கு மாற்றப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்,'' என்றார்.

ரூ. 1 கோடி

சென்னை செஸ் தொடரின் மொத்தபரிசுத் தொகை ரூ. 1 கோடி. மாஸ்டர்ஸ் பிரிவில் வெல்லும் வீரருக்குரூ. 25 லட்சம், 2, 3வது இடம் பெற்றால் ரூ. 15 லட்சம், ரூ. 10 லட்சம் பரிசு கிடைக்கும்.

* சாலஞ்சர்ஸ் பிரிவில் சாதித்தால் ரூ. 7 லட்சம் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us