தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ ஹரிகாவை வென்றார் இனியன் * சென்னை செஸ் தொடரில்...

ஹரிகாவை வென்றார் இனியன் * சென்னை செஸ் தொடரில்...

ஹரிகாவை வென்றார் இனியன் * சென்னை செஸ் தொடரில்...


ADDED : ஆக 08, 2025 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 10:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர். சாலஞ்சர்ஸ் பிரிவில் வைஷாலி, ஹரிகா என இரு வீராங்கனைகள், 8 வீரர்கள் என 10 இந்திய நட்சத்திரங்கள் விளையாடுகின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தன.

ஹரிகா, இனியனை சந்தித்தார். சமீபத்திய உலக கோப்பை தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய ஹரிகா, நேற்று கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். துவக்கத்தில் இருந்து பின்தங்கிய இவர், 39 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் அபிமன்யு, மெடோன்காவை வென்றார்.

வைஷாலி-அதிபன் பாஸ்கரன், பிரனேஷ்-திப்தயன், ஹர்ஷவர்தன்-ஆர்யன் மோதிய போட்டிகள் 'டிரா' ஆகின. இரண்டு சுற்று முடிவில் அபிமன்யு, பிரனேஷ், திப்தயன், இனியன், தலா 1.5 புள்ளியுடன் 'டாப்-4' இடத்தில் உள்ளனர்.

அர்ஜுன் 'டிரா'

மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் வான் பாரீஸ்ட் மோதினர். இப்போட்டி 42வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. ஜெர்மனியின் வின்சென்ட், பிரனவை வீழ்த்தினார். கார்த்திகேயன் முரளி, அவாண்டர் லியாங் (அமெரிக்கா), நிஹால் சரின்-அனிஷ் கிரி (நெதர்லாந்து) மோதிய போட்டிகள் 'டிரா' ஆகின.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ராப்சன், விதித் குஜ்ராத்தியை வீழ்த்தினார். இரண்டு சுற்று முடிவில் வின்சென்ட் (2.0), ராப்சன் (1.5), அர்ஜுன் (1.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us