தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கார்ல்சனை வீழ்த்திய அர்ஜுன்

கார்ல்சனை வீழ்த்திய அர்ஜுன்

கார்ல்சனை வீழ்த்திய அர்ஜுன்


ADDED : பிப் 14, 2026 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 10:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெய்சென்ஹாஸ்: சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில், ஜெர்மனியில் பிரீஸ்டைல் செஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2025ல் நடந்த பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் 'டாப்-8' இடம் பெற்ற, இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஐந்து முறை உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

முதலில் 'ரவுண்டு ராபின்' முறையில் ஒவ்வொருவரும், மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோதினர். முதல் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட், 4வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவை வென்றார்.

6வது சுற்றில் அர்ஜுன், கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 8வது நகர்த்தலில் முந்தினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இவர், 28 நகர்த்தலில் வெற்றி பெற்றார். இருப்பினும் 7 சுற்று முடிவில் அர்ஜுன், 3.0 புள்ளியுடன் 6வது இடம் பெற, அரையிறுதி வாய்ப்பை இழந்தார். 5 முதல் 8 வரையிலான இடத்தை பெற, அர்ஜுன், மீண்டும் ஜாவோகிரை சந்திக்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us