ADDED : மே 08, 2026 11:03 PM

வார்ஷா: கிராண்ட் செஸ் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. ஆறு தொடரின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பை கொண்டு செல்வார். இதன் முதல் தொடர் போலந்தின் வார்ஷாவில் நடக்கிறது. முதலில் நடந்த 'ரேபிட்' முறையிலான போட்டியில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், 9 சுற்றில் 9.0 புள்ளி மட்டும் பெற்று, நான்காவது இடம் பிடித்தார்.
நேற்று 'பிளிட்ஸ்' முறையிலான போட்டி நடந்தது. நேற்று 9 சுற்று போட்டிகள் நடந்தன. முதல் இரண்டு சுற்றில் குகேஷ், தோல்வியடைந்தார். மூன்றாவது சுற்றில் செக் குடியரசின் விளாடிமிருக்கு எதிராக 'டிரா' செய்தார். நான்காவது சுற்றில் குகேஷ், அமெரிக்காவின் சோ வெஸ்லேவுடன் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 62வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
நான்கு சுற்று முடிவில் 1.5 புள்ளியுடன் குகேஷ், 8வது இடத்தில் இருந்தார்.
