உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 30, 2026 11:08 PM

அ நிறம் | அளவு
ஷிம்கென்ட்: கஜகஸ்தான் செஸ் தொடரில் இந்தியாவின் பிரனவ் சாம்பியன் ஆனார்.
கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் சர்வதேச மாஸ்டர் செஸ் தொடர் நடந்தது. இந்தியாவின் பிரனவ் வெங்கடேஷ், செக் குடியரசின் அலெக்சி சரனா உட்பட 10 வீரர்கள் பங்கேற்றனர். 8 சுற்று முடிவில் 5 வெற்றி, 3 'டிரா' செய்து, 6.5 புள்ளியுடன் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார் பிரனவ்.
9வது, கடைசி சுற்றில் பிரனவ், கஜகஸ்தானின் எர்காலி சுலைமானை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரனவ், 28 நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
9 சுற்றில் மொத்தம் 7.5 புள்ளியுடன் (6 வெற்றி, 3 'டிரா') முதலிடம் பிடித்த பிரனவ், சாம்பியன் கோப்பை தட்டிச் சென்றார். உஸ்பெகிஸ்தானின் ஷம்சித்தின் (6.0), ஹங்கேரியின் பெஞ்சமின் (5.0) அடுத்த இரு இடம் பெற்றனர்.
