ADDED : நவ 29, 2025 10:50 PM

லண்டன்: லண்டனில் கிளாசிக் செஸ் தொடர் நடக்கிறது. மொத்தம் 119 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, பிரனவ் ஆனந்த், பத்ரிநாத் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். இதன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, இரண்டாவது சுற்றில் உக்ரைனில் எல்தர் கசனோவை எதிர்கொண்டார்.
வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, போட்டியின் 32வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அடுத்து மூன்றாவது சுற்றில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் நிகோ சாசின் மோதினர். இம்முறை வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய இவர், 52வது சுற்றில் வென்றார்.
இதுவரை முடிந்த மூன்று சுற்றிலும் அசத்திய பிரக்ஞானந்தா, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார். பட்டியலில் 3.0 புள்ளியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்தின் ஸ்டீபன் (3.0), 3வது இடத்தில் பிரனவ் ஆனந்த் (3.0) உள்ளனர்.
