/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆனந்த்-பிரக்ஞானந்தா 'டிரா' * செஸ் மாஸ்டர்ஸ் காலிறுதியில்...
/
ஆனந்த்-பிரக்ஞானந்தா 'டிரா' * செஸ் மாஸ்டர்ஸ் காலிறுதியில்...
ஆனந்த்-பிரக்ஞானந்தா 'டிரா' * செஸ் மாஸ்டர்ஸ் காலிறுதியில்...
ஆனந்த்-பிரக்ஞானந்தா 'டிரா' * செஸ் மாஸ்டர்ஸ் காலிறுதியில்...
ADDED : அக் 15, 2024 11:10 PM

லண்டன்: ஆனந்த், பிரக்ஞானந்தா மோதிய செஸ் மாஸ்டர்ஸ் காலிறுதி, முதல் போட்டி 'டிரா' ஆனது.
இங்கிலாந்தின் லண்டனில் செஸ் மாஸ்டர்ஸ் தொடர் நடக்கிறது. விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா உட்பட இந்தியாவின் 5 பேர் காலிறுதிக்கு முன்னேறினர். நேற்று காலிறுதி போட்டி நடந்தன. இந்தியாவின் ஆனந்த்-பிரக்ஞானந்தாவை சந்தித்தார். கடைசியாக 2018ல் கோல்கட்டாவில் நடந்த போட்டியில் இருவரும் மோதினர். தற்போது 6 ஆண்டுக்குப் பின் இருவரும் மீண்டும் களமிறங்கினர். இதன் முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஆனந்த், 30 வது நகர்த்தல் வரை ஆதிக்கம் செலுத்தி முன்னேறினார். பின் சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா, 52வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
மற்றொரு காலிறுதியில் விதித் குஜ்ராத்தி-அர்ஜுன் எரிகைசி மோதினர். முதல் போட்டியில் விதித், வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட அர்ஜுன், முன்னிலையில் இருந்தார். பின் 53வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
இந்தியாவின் ரவுனக் சத்வானி, தாமதமாக வந்ததால், பிரான்சின் அலிரேசா, காலிறுதி முதல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.