/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கோப்பை வென்றார் அர்ஜுன் * செஸ் மாஸ்டர்ஸ் தொடரில்...
/
கோப்பை வென்றார் அர்ஜுன் * செஸ் மாஸ்டர்ஸ் தொடரில்...
கோப்பை வென்றார் அர்ஜுன் * செஸ் மாஸ்டர்ஸ் தொடரில்...
கோப்பை வென்றார் அர்ஜுன் * செஸ் மாஸ்டர்ஸ் தொடரில்...
ADDED : அக் 18, 2024 10:57 PM

லண்டன்: இங்கிலாந்தின் லண்டனில் செஸ் மாஸ்டர்ஸ் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரான்சின் மேக்சிம் வாசியர் மோதினர். இதன் முதல் போட்டியில் அர்ஜுன் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார்.
30வது நகர்த்தலில் போட்டி டிரா ஆனது. அர்ஜுன், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய இரண்டாவது போட்டியும் டிரா ஆனது.
வெற்றியாளரை முடிவு செய்ய 'டை பிரேக்கர்' நடந்தது. இதில் அர்ஜுன் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். அர்ஜுன் ஆதிக்கம் செலுத்தினார். இவர், 69 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முடிவில் 2.0-1.0 என்ற கணக்கில் வென்று, கோப்பை தட்டிச் சென்றார். இவருக்கு ரூ. 18 லட்சம் பரிசு கிடைத்தது.