ADDED : ஜூன் 02, 2026 10:59 PM

ஓஸ்லோ: நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, திவ்யா, குகேஷ் வெற்றி பெற்றனர்.
நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்கல்') தொடர் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, 5 முறை உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன் உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் ஏழாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரேசா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 51 நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
குகேஷ்-அமெரிக்காவின் வெஸ்லே மோதிய போட்டி 'டிரா' ஆக, அடுத்து 'டை பிரேக்கர்' நடந்தது. இதில் குகேஷ் 47வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
ஏழு சுற்று முடிவில் வெஸ்லே (12.5 புள்ளி), பிரான்சின் அலிரேசா (10.0), கார்ல்சன் (9.0) 'டாப்-3' இடங்களில் உள்ளனர். பிரக்ஞானந்தா (9.0), குகேஷ் (8.0) 5, 6வது (கடைசி) இடத்தில் உள்ளனர்.
திவ்யா வெற்றி
பெண்கள் பிரிவில் உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, ஹம்பி, உலக சாம்பியன், சீனாவின் ஜு வென்ஜுன், உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். ஏழாவது சுற்றில் இந்தியாவின் திவ்யா-ஹம்பி மோதினர். இப்போட்டி 'டிரா' ஆக 'டை பிரேக்கர்' நடந்தது. இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 31 நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
ஏழு சுற்று முடிவில் பிபிசாரா (12.5 புள்ளி), திவ்யா (10.0), உக்ரைனின் முஜிசுக் (9.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். ஹம்பி (6.5 புள்ளி) கடைசி இடத்தில் (6வது) தொடர்கிறார்.
