/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ் ஒலிம்பியாட்: இந்தியா அபாரம்
/
செஸ் ஒலிம்பியாட்: இந்தியா அபாரம்
ADDED : செப் 12, 2024 11:14 PM

புடாபெஸ்ட்: செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்றில் இந்திய அணிகள் வெற்றி பெற்றன.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தப்படுகிறது. ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 45வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவில் 191, பெண்கள் பிரிவில் 180 அணிகள் பங்கேற்கின்றன.
ஓபன் பிரிவு முதல் சுற்றில் இந்திய ஆண்கள் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. இந்தியா சார்பில் களமிறங்கிய பிரக்ஞானந்தா, முகமதுவை, 30வது நகர்த்தலில் வென்றார். மற்ற போட்டிகளில் அர்ஜுன் எரிகைசி, விதித் சந்தோஷ், ஹரிகிருஷ்ணா என மூவரும் வெற்றி பெற்றனர். இந்திய அணி 4.0-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2 புள்ளி பெற்றது.
இந்திய பெண்கள் அணி முதல் சுற்றில் (4 போட்டி), ஜமைக்காவை சந்தித்தது. இந்தியாவின் வைஷாலி, அடானி கிளார்க் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய வைஷாலி, 29 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இளம் வீராங்கனை திவ்யா, 'சீனியர்' தானியா சச்தேவ் தங்களது போட்டியில் வெற்றி பெற்றனர். வந்திதா-ரேஹன்னா மோதிய போட்டி 'டிரா' ஆனது. முடிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2 புள்ளி பெற்றது.