தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ்: அரவிந்த் அசத்தல்

செஸ்: அரவிந்த் அசத்தல்

செஸ்: அரவிந்த் அசத்தல்


ADDED : பிப் 27, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிராகு: பிராகு செஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றார்.

செக் குடியரசின் பிராகு நகரில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், இத்தொடரின் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். இரண்டாவது சுற்றில் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் ஹன்ஸ் நைமானை எதிர்கொண்டார்.

கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய சிதம்பரம், 28 நகர்த்தலில் பின்தங்கி இருந்தார். பின் சிறப்பாக செயல்பட்ட அரவிந்த், 53 நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் யாகுப்போயவை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 30 நகர்த்தலில் 'டிரா' செய்தார்.

இரண்டு சுற்று முடிவில் நாடிர்பெக் (1.5), உஸ்பெகிஸ்தானின் யாகுப்போயவ் (1.5), செக் குடியரசின் நவாரா (1.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். குகேஷ் (1.0), சிதம்பரம் (1.0) 4, 6வது இடத்தில் உள்ளனர். சாலஞ்சர் பிரிவில் இந்தியாவின் திவ்யா, ஸ்பெயினின் டேனில் யுபா மோதிய இரண்டாவது சுற்று போட்டி 'டிரா' ஆனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us