ADDED : பிப் 28, 2026 07:38 PM

பிராகு: பிராகு செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ் தோல்வியடைந்தார்.
செக் குடியரசின் பிராகு நகரில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், இத்தொடரின் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். இதன் மூன்றாவது சுற்றில் குகேஷ், நெதர்லாந்தின் ஜோர்டான் வான் பாரீஸ்ட்டை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 48 நகர்த்தலில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மற்றொரு போட்டியில் அரவிந்த் சிதம்பரம், ஈரானின் பர்ஹாமை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அரவிந்த், 30 நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
மூன்று சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (2.0), ஜோர்டான் (2.0), உஸ்பெகிஸ்தானின் யாகுப்போயவ் (2.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். அரவிந்த் (1.5) 5வது இடத்துக்கு முன்னேறினார். குகேஷ் (1.0) 8வது இடத்திற்கு தள்ளப்பட்டார். சாலஞ்சர் பிரிவில் இந்தியாவின் திவ்யா, சீனாவின் ஜு ஜினெரிடம் தோல்வியடைந்தார்.

