sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

செஸ்: குகேஷ் 'டிரா'

/

செஸ்: குகேஷ் 'டிரா'

செஸ்: குகேஷ் 'டிரா'

செஸ்: குகேஷ் 'டிரா'


ADDED : பிப் 26, 2026 11:13 PM

Google News

ADDED : பிப் 26, 2026 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிராகு: செக் குடியரசின் பிராகு நகரில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், இத்தொடரின் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் குகேஷ், அமெரிக்காவின் ஹன்ஸ் நைமானை எதிர்கொண்டார்.

குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். 39வது நகர்த்தலில் குகேஷ் பின்தங்கினார். பின் சுதாரித்துக் கொண்ட குகேஷ், 62 நகர்த்தலில் 'டிரா' செய்தார்.

மற்றொரு போட்டியில் அரவிந்த் சிதம்பரம், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை சந்தித்தார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அரவிந்த், 55 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். ஜெர்மனியின் வின்சென்ட், நெதர்லாந்தின் ஜோர்டெனிடம் தோல்வியடைந்தார்.

முதல் சுற்று முடிவில் நாடிர்பெக் (1.0), ஜோர்டென் (1.0), உஸ்பெகிஸ்தானின் யாகுப்போயவ் (1.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். குகேஷ் (0.5) 5வது இடத்தில் உள்ளார்.

சாலஞ்சர் பிரிவில் களமிறங்கிய, உலக கோப்பை வென்ற இந்தியாவின் திவ்யா, முதல் சுற்றில் ஹங்கேரியின் பெஞ்சமினுக்கு எதிராக 'டிரா' செய்தார்.






      Dinamalar
      Follow us