/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: பிரக்ஞானந்தா ஏமாற்றம்
/
செஸ்: பிரக்ஞானந்தா ஏமாற்றம்
ADDED : ஆக 13, 2024 11:15 PM

செயின்ட் லுாயிஸ்: செயின்ட் லுாயிஸ் செஸ் தொடரின் முதல் மூன்று சுற்றில், இரண்டில் தோற்றார் பிரக்ஞானந்தா.
அமெரிக்காவில் செயின்ட் லுாயிஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்கின்றனர். முதல் நாளில் 3 சுற்று நடந்தன. முதல் சுற்றில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியனை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, போட்டியின் 80 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
இரண்டாவது சுற்றில் பிரான்சின் மேக்சிம் வாசியருடன் மோதினார். இப்போட்டியில் வெள்ளை நிறகாய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 57 வது நகர்த்தலில் வீழ்ந்தார்.
மூன்றாவது சுற்றில் பிரக்ஞானந்தா, ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சியை எதிர்கொண்டார். இதில் மீண்டும் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, பல்வேறு தவறுகள் செய்ய, 46 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
முதல் மூன்று சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, 1 புள்ளி மட்டும் பெற்று, 9வது இடத்தில் உள்ளார். வாசியர் (5.0), ஆரோனியன் (4.0) முதல் இரு இடத்தில் உள்ளனர்.

