/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
/
குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
ADDED : ஆக 19, 2025 10:57 PM

செயின்ட் லுாயிஸ்: அமெரிக்காவில் சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா என இருவர் உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் குகேஷ், பிரக்ஞானந்தாவை சந்தித்தார்.
இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். போட்டியின் 36 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். அமெரிக்காவின் லெவான் ஆரோனியன், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை வென்றார்.
முதல் சுற்று முடிவில் ஆரோனியன் (1.0), பிரக்ஞானந்தா (1.0) 'டாப்-2' இடத்தில் உள்ளனர். குகேஷ் (0) கடைசி இடத்தில் (10) உள்ளார்.
'நம்பர்-3' இடம்
இந்த வெற்றியை அடுத்து, சர்வதேச செஸ் லைவ் தரவரிசையில், 5 புள்ளி கூடுதலாக பெற்ற பிரக்ஞானந்தா (மொத்தம் 2784.0) ஒரு இடம் முன்னேறி, உலகின் 'நம்பர்-3' வீரர் ஆனார். இது இவரது சிறந்த தரவரிசை ஆனது. முதல் இரு இடத்தில் கார்ல்சன் (2839.0, நார்வே), ஹிகாரு நகமுரா (2807.0, அமெரிக்கா) உள்ளனர்.
பேபியானோ (2783.2, அமெரிக்கா), குகேஷ் (2771.0) 4, 5வது இடத்தில் உள்ளனர்.