தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ்: வைஷாலி கலக்கல்

செஸ்: வைஷாலி கலக்கல்

செஸ்: வைஷாலி கலக்கல்


ADDED : செப் 09, 2025 10:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 10:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமர்கந்த்: கிராண்ட் சுவிஸ் தொடரில் நான்காவது வெற்றி பெற்றார் வைஷாலி.

உஸ்பெகிஸ்தானில் 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் நடக்கிறது. இதில் 'டாப்-2' இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.

இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் உலக சாம்பியன் குகேஷ், உலக கோப்பை வென்ற திவ்யா, பிரக்ஞானந்தா உட்பட 10 பேர் ஓபன் பங்கேற்கின்றனர். பெண்கள் பிரிவில் வைஷாலி, வந்திகா, ஹரிகா உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். இதன் 6வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன.

இந்தியாவின் வைஷாலி, அஜர்பெய்ஜானின் உல்விய்யா படாலியேவாவை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, போட்டியின் 41வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 6 சுற்றில் 5.0 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்தியாவின் நிஹால் சரின், போலந்தின் குமுலர்சை வென்றார். அர்ஜுன், திவ்யா, கார்த்திகேயன் முரளி, நாராயணன், ரவுனக், ஹரிகிருஷ்ணா உள்ளிட்டோர் தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us