
விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்தில், சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவு 9வது சுற்றில், 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், சகவீரர் மெடொன்கா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 43வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இத்தொடரில் குகேஷ் பெற்ற 4வது வெற்றி இது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் அர்ஜுன், சீனாவின் வெய் இ மோதிய போட்டி 'டிரா' ஆனது.
ஒன்பது சுற்று முடிவில் இந்தியாவின் குகேஷ், 6.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (6.0), ரஷ்யாவின் விளாடிமிர் (6.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (5.5) நான்காவது இடத்தில் உள்ளார்.
சாலஞ்சர் பிரிவில் 9 சுற்று முடிவில் இந்தியாவின் வைஷாலி (5.0) அதிகபட்சம் 8வது இடம் பிடித்துள்ளார். திவ்யா (2.0) 13வது இடத்தில் உள்ளார்.

