/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: பிரக்ஞானந்தா அபாரம் * 'நம்பர்-2' வீரரை வீழ்த்தினார்
/
செஸ்: பிரக்ஞானந்தா அபாரம் * 'நம்பர்-2' வீரரை வீழ்த்தினார்
செஸ்: பிரக்ஞானந்தா அபாரம் * 'நம்பர்-2' வீரரை வீழ்த்தினார்
செஸ்: பிரக்ஞானந்தா அபாரம் * 'நம்பர்-2' வீரரை வீழ்த்தினார்
ADDED : பிப் 01, 2025 11:13 PM

விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்தில், சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவு 11வது சுற்றில், இந்தியாவின் 10 வது இடத்திலுள்ள பிரக்ஞானந்தா, உலகின் 'நம்பர்-2' வீரர் அமெரிக்காவின் பேபியானோ காருணாவை சந்தித்தார். பிரக்ஞானாந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். 31 நகர்த்தல் வரை போட்டி சமநிலையில் இருந்தது. இதன் பின் காருணா செய்த தவறை பயன்படுத்திக் கொண்ட பிரக்ஞானந்தா, 37 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், சீனாவின் வெய் இ மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. மற்ற இந்திய வீரர்கள் மடோன்கா, ஹரிகிருஷ்ணா தங்களது போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
11 சுற்று முடிவில் குகேஷ், 8.0 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (7.5), பிரக்ஞானந்தா (7.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.