/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வைஷாலியிடம் கை குலுக்க மறுப்பு * நெதர்லாந்து செஸ் தொடரில் சர்ச்சை
/
வைஷாலியிடம் கை குலுக்க மறுப்பு * நெதர்லாந்து செஸ் தொடரில் சர்ச்சை
வைஷாலியிடம் கை குலுக்க மறுப்பு * நெதர்லாந்து செஸ் தொடரில் சர்ச்சை
வைஷாலியிடம் கை குலுக்க மறுப்பு * நெதர்லாந்து செஸ் தொடரில் சர்ச்சை
ADDED : ஜன 27, 2025 10:45 PM

விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் 87வது சீசன் நடக்கிறது. இதன் சாலஞ்சர் பிரிவு 4வது சுற்றில் இந்திய வீராங்கனை வைஷாலி, உஸ்பெகிஸ்தான் வீரர் நாடிர்பெக் யாகூப்போயவ் மோதினர். போட்டி துவங்கும் முன் மரியாதை நிமித்தமாக வைஷாலி, நாடிர்பெக்கிடம் கை குலுக்க, தனது கையை நீட்டினார். இதை மறுத்து, போட்டியை துவக்கினார். பின் வைஷாலி போட்டியில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றார்.
மன்னிப்பு
இதுகுறித்து நாடிர்பெக் கூறுகையில்,''பெண்களையும், இந்திய செஸ் நட்சத்திரங்களையும் பெரிதும் மதிக்கிறேன். எங்களது மத வழக்கப்படி மற்ற பெண்களை தொடுவதில்லை. இந்தியாவின் சிறந்த பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி மீது எப்போதும் மரியாதை உண்டு. எனது செயல் காயப்படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார்.
கடந்த 2023ல் நடந்த டாடா தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா உடன் நாடிர்பெக் கை குலுக்கினார். இப்போது வைஷாலிக்கு மட்டும் மறுத்தது விமர்சிக்கப்படுகிறது.