ADDED : மே 06, 2026 10:46 PM

மால்மோ: கிளாசிக் செஸ் தொடரின் அர்ஜுன், இரண்டாவது வெற்றி பெற்றார்.
சுவீடனின் மால்மோ நகரில், 'டெபே சீஜ்மான்' கிளாசிக் செஸ் தொடர் நடக்கிறது. 5 முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 8 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் ஜோர்டென் பாரீஸ்ட் மோதினர். அர்ஜுன் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். போட்டியின் 25 வது நகர்த்தலில் பாரீஸ்ட் செய்த தவறை பயன்படுத்திய அர்ஜுன், இதன் பின் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். 30 வது நகர்த்தலில் அர்ஜுன் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் கார்ல்சன், சீன வீராங்கனை ஜு ஜினெரை சந்தித்தார். இதில் கார்ல்சன் 41 நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஐந்து சுற்று முடிவில் அர்ஜுன், 3.5 புள்ளியுடன் (2 வெற்றி, 3 'டிரா') முதலிடத்துக்கு முன்னேறினார்.
துருக்கியின் யாஜிஸ் (3.5), உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (3.0), கார்ல்சன் (3.0) அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.

