உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 10, 2026 11:03 PM

அ நிறம் | அளவு
தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மூன்றாவது 'உஸ்செஸ்' கோப்பை தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். இதன் நான்காவது சுற்றில் அர்ஜுன், விதித் குஜ்ராத்தி மோதினர்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 46 நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
மற்றொரு போட்டியில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக், மடமினோவ் மோதினர்.
இதில் 60 வது நகர்த்தலில் நாடிர்பெக் வெற்றி பெற்றார். நான்கு சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தானின் ஷம்சிதின் (2.5), அர்ஜுன் (2.5), நாடிர்பெக் (2.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். விதித் குஜ்ராத்தி (1.0) கடைசி (10) இடத்தில் உள்ளார்.
