தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ்: வைஷாலி முதலிடம் * உலக 'பிளிட்ஸ்' தொடரில்

செஸ்: வைஷாலி முதலிடம் * உலக 'பிளிட்ஸ்' தொடரில்

செஸ்: வைஷாலி முதலிடம் * உலக 'பிளிட்ஸ்' தொடரில்


ADDED : டிச 31, 2024 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2024 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்: உலக 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை வைஷாலி முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக 'ரேபிட் அண்ட் பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 'ரேபிட்' பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, இரண்டாவது முறையாக (2019, 2024) சாம்பியன் ஆனார்.

அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகமாக நகர்த்துதல்) முறையில் போட்டி நடந்தது. இதில் மொத்தம் 108 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதன் 11 வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி (தமிழகம்), அமெரிக்காவின் காரிஸ்சா மோதிய போட்டி 'டிரா' ஆனது. இதையடுத்து 11 சுற்றில் 8 வெற்றி, 3 'டிரா' செய்த வைஷாலி, மொத்தம் 9.5 புள்ளி பெற்று, முதலிடம் பிடித்தார்.

சீனாவின் டிங்ஜீ (8.5), ரஷ்யாவின் கேத்தரினா (8.0) அடுத்த இரு இடம் பிடித்தனர். வைஷாலி உட்பட 'டாப்-8' இடம் பிடித்த வீராங்கனைகள் 'நாக் அவுட்' சுற்றுக்கு (காலிறுதி) முன்னேறினர். இந்தியாவின் ஹம்பி (8.0) 9வது இடம் பிடித்தார். திவ்யா (7.0) 17, வந்திகா (7.0) 18 வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

பிரக்யானந்தா ஆறுதல்

ஆண்களுக்கான ஓபன் பிரிவில் ரஷ்யாவின் நேபோம்னியாட்சி (9.5), அமெரிக்காவின் பேபியானோ காருணா (9.5), நார்வேயின் கார்ல்சன் (9.5) உள்ளிட்ட 'டாப்-8' வீரர்கள், காலிறுதிக்குள் நுழைந்தனர். இந்தியாவின் பிரக்யானந்தா (8.5) அதிகபட்சம் 24 வது இடம் பிடித்து, வெளியேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us